Monday, April 27, 2009

அபியும் நானும் -பகுதி-3

நான் குறும் செய்தி அனுப்புவதை நிறுத்திய சில நிமிடங்களில் அவனிடம் இருந்து மீண்டும் ஒரு செய்தி என் கை தொலை பேசிக்கு வந்தது. "உன்னை சந்திப்பதற்காகவே நான் இவளவு தூரம் வந்து இருக்கிறேன்,நேரத்தின் அருமை உனக்கு நன்கு தெரியும் ,அதனால் தயவு செய்து என்னை சந்திக்க வரவும்"என்று அந்த செய்தியில் குறிப்பிட பட்டு இருந்தது.
ஏற்கனவே இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி கொண்டு இருந்த என் இதயத்திற்கு அவன் கெஞ்சி கேட்டது மேலும் இதயத்தை தொட சரி அவனை சந்திக்கலாம் என முடிவெடுத்து ,மறுநாள் அவனை சந்திக்க வருவதாக தெரிவித்து விட்டு எங்கள் இருவருக்கும் தெரிந்த பொதுவான நகரின் நடுப்பகுதியில் அமைந்த ஒரு இடத்திற்கு அவனை வர சொல்லி காத்திருக்க சொன்னேன்.
மறுநாள் காலை எழுந்து கிளம்பி காலை பத்தரை மணி அளவில் நான் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு என் காரில் சென்று சேர்ந்தேன். அது ஒரு விடுமுறை தினம் என்பதால் வழக்கமாக கூட நெரிசலுடன் காணப்படும் அந்த பகுதி வெகு சில மனித நடமாடதுடன் மட்டும் காணப்பட்டது.
ஏற்கனவே அவன் புகை படத்தை நானும் ,என் படத்தை அவனும் பகிர்ந்து கொண்டதால் நான் காருடன் அந்த இடத்தில் நுழையும் போதே ஒரு கடை வாசலில் நின்று கொண்டு இருந்த அபி என்னை அடையாளம் கண்டு கொண்டான்.கூட்ட நெரிசல் இல்லாததால் தனியாக நின்று கொண்டு இருந்த அவனை எந்நாளும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
இருவரும் நெருங்கி ஒருவருடன் ஒருவர் கைகுளிக்கி அறிமுக படுத்தி கொண்டு அவன் தங்கி இருந்த விடுதி அறை நோக்கி நடக்க தொடங்கினோம்.
அபி,கேரளத்து வாலிபர்களுக்கு உரித்தான நல்ல நிறம்,ஒல்லியான உடல் அமைப்பு ,aintharai அடி உயரம் ,ஒருநாள் சவரம் செய்யப்படாத தாடி,மெல்லிய காட்டன் சட்டை ,சட்டையின் மேல் பொத்தான் திறந்திருக்க அதன் வழியே லேசான வியர்வை துளிகளுடன் நனைத்து காணப்பட்ட மார்பு ரோம கற்றைகள்.இரவு அணியும் உடையின் முழு கால் சட்டையை அணிந்து இருந்தான்.
இருவரும் பேசியபடி அவன் விடுதி அறை நோக்கி நடந்தோம்.அவன் கேரளத்து வாலிபன் என்பதால் தமிழ் அவனுக்கு தெரியவில்லை,புரியவும் இல்லை.எனவே அவனுடன் ஆங்கிலத்தில் உரையாடியபடி நடந்து கொண்டு இருந்தேன்.அவன் என்னுடன் அதிகம் உரையாடாமல் சற்று அவசர பதட்டதுடன் காணப்பட்டான்.
அவன் என்னை அந்த நகரின் மயத்தில் அமைந்து இருந்த பெரிய கோவில் அருகில் இருந்த ஒரு விடுதிக்கு அழைத்து சென்றான்.அவன் இந்த விடுதியை பற்றி கூறியது எனக்கு புரியாமல் போனது பற்றியும்,அவனை தவறாக புரிந்து கொண்டதற்காகவும் அப்போது வருத்த பட்டேன். அதுவரை அந்த சிறிய விடுதியை நான் பலமுறை கடந்து சென்றபோதும் கவனிக்க தவறி இருந்தேன்.






Monday, April 13, 2009

அபியும் நானும்-பகுதி-2

நான் ஏன் தகவல்களை அனுப்பிய சிறிது நேரத்தில் எனக்கு அந்த கேரளா வாலிபனின் இணைய முகவரியில் இருந்து வந்து இருந்தது.என்னை பிடித்து இருப்பதாகவும்,தான் கோவையில் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும்,படிப்பு சம்பந்தமாக என் ஊருக்கு வர இருப்பதாகவும்,தன் செக்ஸ் விருப்பங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தான்.நான் அவன் பெயரை கேட்க அவன் தன் பெயர் "அபி" என்று கூறினான்.
நான் அவனுடைய புகை படத்தை காட்டுமாறு கேட்க ஒரு ஸ்டாம்ப் அளவு ,தெளிவில்லா புகைப்படம் ஒன்று என் இணைய முகவரிக்கு அவனால் அனுப்பப்பட்டது.படம் தெளிவில்லாவிட்டாலும் அவனை எனக்கு பிடித்து போல மனதுக்கு இருந்தது.


அதன் பிறகு ஒரு சனிக்கிழமை மாலை ஏன் தொலை பேசி எண்ணுக்கு ,அவன் தொலை பேசியில் இருந்து ஒரு அழைப்பு.அவன் என் ஊருக்கு வந்து விட்டதாகவும் ,அறையில் தனியாக இருப்பதாகவும் ,என்னை உடனே சந்திக்க வேண்டும் என்றும் சொன்னான்.
நான் பணியில் இருந்ததால் என்னால் உடனே கிளம்பி வர முடியாது என்று நான் கூற அப்படியானால் இரவு வந்து அவனுடன் தங்குமாறு வற்புறுத்த துவங்கினான் அந்த கேரளா அபி.
நான் இரவு வந்து அவனுடன் தங்குவது முட்யாது என்றும் ,உள் ஊரில் இரவு நேரம் வெளியே தங்குவது எனக்கு ஆபத்து என்று கூறி ,அவன் தங்கி இருக்கும் முகவரி பற்றி கேட்க குழப்பம் ஆரம்பம் ஆனது.
நகரின் ஒரு பெரிய கோயில் அருகே ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக அவன் கூற,எனக்கு சந்தேகம்.எனக்கு தெரிந்து அந்த பெரிய கோயில் அருகே தாங்கும் விடுதி எதுவும் இல்லை.எனவே சற்று தெளிவாக முகவரி கூறுமாறு கேட்க என் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் இப்போது அந்த கோயில் அருகில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகே வருமாறு கூறினான்.
எனக்கு எரிச்சல் ஏற்பட தொடங்கியது.என்னை பற்றியும்,என் தொழில் பற்றியும் சொல்லியும்,நம்பாமல் என் மீது சந்தேக பட்டு முகவரியை மாற்றி சொல்கிறானே என்று கோபம் வர,நான் அவனிடம் நீ சொல்கிற பெயரில் ஒரு விடுதியும் அந்த கோயில் அருகில் எனக்கு தெரிந்து இல்லை. எனவே சற்று தெளிவாக உன் முகவரி பற்றி சொல்.அல்லது ஆளை விடு .என்று கண்டிப்புடன் கூற எரிச்சல் ஆனான் அபி.
நீ அந்த நகரத்தில் தான் இருக்கிறாயா அல்லது அமெரிக்காவில் இருக்கிறாயா ?என்று ஆத்திரம் தொனிக்க அபி என்னை கேட்க ,என்னிடம் பொய் சொல்வதோடு மட்டும் இல்லாமல் கோபம் வேறு கொள்கிறானே இவன்.இவன் நமக்கு சரி பட மாட்டான் என்று எண்ணி ,அவன் அமெரிக்கா கேள்விக்கு பதில் தராமல் நான் அமைதியாக என் பணியை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

Saturday, April 11, 2009

அபியும் ,நானும்-பகுதி -1

ஒரு இனிய மாலை பொழுதில் நான் ஒரு செக்ஸ் இணையத்தளத்தில் உலவி கொண்டு இருந்தபோது ,அந்த தளத்தில் ஒரு ஊரில் இருந்த மற்றொரு ஊருக்கு செல்பவர்களுடைய குறிப்புகள் அடங்கிய பகுதி என்னை வெகுவாக கவர அதில் நுழைந்து அங்கு குறிப்பிட பட்டு இருந்த தகவல்களை படித்து கொண்டு இருந்தபோது ஒரு குறிப்பிட பெயர் என் கவனத்தை கவர்ந்தது.
கேரளா மாநிலத்தில் இருந்து என் ஊருக்கு வருவதாகவும் ,வயது இருபது ஆறு என்றும் குறிப்பிட பட்டு இருந்தது.ஒரு சில குறிப்புகளில் அதிக panthaavudan தங்களை பற்றி புகழ்ந்து சிலர் எழுதி இருப்பதை படித்து இருந்த எனக்கு இந்த கேரளா வாலிபரின் குறிப்பில் இல்லாதது மிக்க ஆர்வத்தை தர மேற்கொண்டு அவரின் குறிப்புகளை படிக்க தொடங்கினேன்.
எனக்கு மிகவும் பிடித்து போகவே ,அதில் தொடர்புக்காக குறிப்பிட பட்டு இருந்த கைத்தொலைபேசி இலக்கத்தில் நான் அந்த கேரளா வாலிபரை சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பினேன்.
தகவல் அனுப்பிய சில நொடிகளில் அந்த கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து பதில் தகவல் அனுப்பப்பட்டது.அதில் என் பெயர்,வயது,என் விருப்பங்கள்,என் தொழில்,என் உடல் அமைப்பு ஆகிய குறிப்புகள் தேவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.எல்லோரையும் போல் புகை படம் ஒன்றும் அனுப்புமாறு தகவல் வர,புகைப்படத்துடன் என் தகவல்களை அந்த கேரளா வாலிபரின் இணைய முகவரிக்கு அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தேன்.

abiyum,naanum..

             intha sambavam oru keralathu vaalibanudan enakku yerpatta uravai patriya kathai.avan sontha veliyaaga en oorukku vanthapothu naangal santhithukondapothu nadantha sambavathai ungalukku alagudan padaika irukkiren. padipatharku kaathirungal.