Monday, April 13, 2009

அபியும் நானும்-பகுதி-2

நான் ஏன் தகவல்களை அனுப்பிய சிறிது நேரத்தில் எனக்கு அந்த கேரளா வாலிபனின் இணைய முகவரியில் இருந்து வந்து இருந்தது.என்னை பிடித்து இருப்பதாகவும்,தான் கோவையில் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும்,படிப்பு சம்பந்தமாக என் ஊருக்கு வர இருப்பதாகவும்,தன் செக்ஸ் விருப்பங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தான்.நான் அவன் பெயரை கேட்க அவன் தன் பெயர் "அபி" என்று கூறினான்.
நான் அவனுடைய புகை படத்தை காட்டுமாறு கேட்க ஒரு ஸ்டாம்ப் அளவு ,தெளிவில்லா புகைப்படம் ஒன்று என் இணைய முகவரிக்கு அவனால் அனுப்பப்பட்டது.படம் தெளிவில்லாவிட்டாலும் அவனை எனக்கு பிடித்து போல மனதுக்கு இருந்தது.


அதன் பிறகு ஒரு சனிக்கிழமை மாலை ஏன் தொலை பேசி எண்ணுக்கு ,அவன் தொலை பேசியில் இருந்து ஒரு அழைப்பு.அவன் என் ஊருக்கு வந்து விட்டதாகவும் ,அறையில் தனியாக இருப்பதாகவும் ,என்னை உடனே சந்திக்க வேண்டும் என்றும் சொன்னான்.
நான் பணியில் இருந்ததால் என்னால் உடனே கிளம்பி வர முடியாது என்று நான் கூற அப்படியானால் இரவு வந்து அவனுடன் தங்குமாறு வற்புறுத்த துவங்கினான் அந்த கேரளா அபி.
நான் இரவு வந்து அவனுடன் தங்குவது முட்யாது என்றும் ,உள் ஊரில் இரவு நேரம் வெளியே தங்குவது எனக்கு ஆபத்து என்று கூறி ,அவன் தங்கி இருக்கும் முகவரி பற்றி கேட்க குழப்பம் ஆரம்பம் ஆனது.
நகரின் ஒரு பெரிய கோயில் அருகே ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக அவன் கூற,எனக்கு சந்தேகம்.எனக்கு தெரிந்து அந்த பெரிய கோயில் அருகே தாங்கும் விடுதி எதுவும் இல்லை.எனவே சற்று தெளிவாக முகவரி கூறுமாறு கேட்க என் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் இப்போது அந்த கோயில் அருகில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகே வருமாறு கூறினான்.
எனக்கு எரிச்சல் ஏற்பட தொடங்கியது.என்னை பற்றியும்,என் தொழில் பற்றியும் சொல்லியும்,நம்பாமல் என் மீது சந்தேக பட்டு முகவரியை மாற்றி சொல்கிறானே என்று கோபம் வர,நான் அவனிடம் நீ சொல்கிற பெயரில் ஒரு விடுதியும் அந்த கோயில் அருகில் எனக்கு தெரிந்து இல்லை. எனவே சற்று தெளிவாக உன் முகவரி பற்றி சொல்.அல்லது ஆளை விடு .என்று கண்டிப்புடன் கூற எரிச்சல் ஆனான் அபி.
நீ அந்த நகரத்தில் தான் இருக்கிறாயா அல்லது அமெரிக்காவில் இருக்கிறாயா ?என்று ஆத்திரம் தொனிக்க அபி என்னை கேட்க ,என்னிடம் பொய் சொல்வதோடு மட்டும் இல்லாமல் கோபம் வேறு கொள்கிறானே இவன்.இவன் நமக்கு சரி பட மாட்டான் என்று எண்ணி ,அவன் அமெரிக்கா கேள்விக்கு பதில் தராமல் நான் அமைதியாக என் பணியை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

No comments: