Monday, November 24, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி -1

இரவு மணி பதினொன்று அந்த நகர் மழையிலும்,குளிரிலும் நடுங்கி கொண்டு இருந்தது.அந்த நகரின் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் நுழைந்த அந்த பேரூந்து பயணிகளை உதிர்த்து விட்டு தன் சுவாசத்தை நிறுத்தி கொண்டு இருந்தது. அந்த பேரூந்தில் இருந்து இறங்கினான் பிரகாஷ்.
பிரகாஷ் ,இருபத்துநான்கு வயது வாலிபன்,இன்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு படித்து கொண்டு இருந்தான் ஒரு புகழ் வாய்ந்த கல்லூரியில்.தேர்வு முடிந்து விடுமுறைக்காக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். பிற்பகல் மூன்று மணிக்கு கிளம்பியவன் எட்டு மணிக்கு தான் மிகவும் தாமதமாஹ இந்த நகுருக்கு வந்து இறங்கி இருக்கிறான். இந்த நகரில் இருந்து அவன் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு மணி நேரமாகும்.
பிரகாஷ் காற்றில் அலை பாயும் அழகிய கேசத்துக்கு சொந்தக்காரன்.சிறிய ,காந்தம் போன்ற கண்களும்,அழகான நாசியும் அடர்த்தியான மீசையும்,பரந்த ரோமங்கள் இல்லாத மார்பும்,தொப்பை இல்லாத வயிறும் அவனுக்கு கூடுதல் அழகை தந்தது.சிவப்பு நிற உடலை இறுக்கி பிடித்த பனியனும்,தொடைகளையும்,புட்டத்தையும் இறுக்கி பிடித்தபடி இருந்த ஜீன்ஸ் உம் அவனுக்கு ஒரு புகழ் பெற்ற இளம் நடிகர் ஒருவரின் தோற்றத்தை கொடுத்தது.

No comments: