Friday, December 5, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-1

அந்த மாநகரத்தின் மிக பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு அது.நகரத்தின் செல்வந்தர்கள் ,வெளி நாட்டு வாழ இந்தியர்கள் என பலருக்கு அந்த அறுபது மாடி குடியிருப்பில் இடமுண்டு.அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தன் பாதுகாவலரோடு வசிப்பவன் நிரஞ்சன்.பதினெட்டு வயது பூர்த்தியான விடலை வாலிபன்,அரும்பு மீசையும்,காற்றில் பறக்கும் மென்மையான கேசமும் ,கிள்ளினால் சிவந்து போகிற அளவு சிவப்பு நிறமும்,ரோமங்கள் இல்லாத வழுவழுப்பான தேகமும் ,ஆறு அடி உயரமும்,உடைய நிரஞ்சன் ,இந்த நகரத்தின் புகழ்மிக்க பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் சம்பந்தமான பட்ட படிப்பில் முதலாம் ஆண்டு மாணவன்.அவனுடைய பெற்றோர் இருவரும் அரபு நாட்டில் பணியாற்றிவருவதால் நிரஞ்சன் தனியாக இந்தியாவுக்கு படிக்க வர நேர்ந்தது.ராகிங் கொடுமை இருக்கும் என்று அஞ்சிய நிரஞ்சனின் பெற்றோர் அவனுக்காக இந்த பணக்கார குடியிருப்பில் மூன்று படுக்கை அறை உள்ள வீட்டை விலைக்கு வாங்கி மகனை பாதுகாவலரோடு அங்கு குடி அமர்த்தினர்.
நிரஞ்சன் அங்கிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டு இருந்தான்.நிரஞ்சன் உடைய கல்லூரி வாழ்க்கை எல்லா விடலை வாலிபர்களின் கல்லூரி வாழ்கையை போலவே மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.எல்லா கல்லூரி மாணவர்களையும் போல வகுப்புக்கு கட் அடித்து விட்டு சினிமா,பீச்,ஹோட்டல் ,பொழுது போக்கு பூங்காக்கள் என்று நண்பர்களோடு நகரை வலம் வந்து கொண்டு இருந்தாலும் தினமும் காலையில் ஓட்டபயிர்ச்சி செய்வதையும்,மாலையில் டென்னிஸ் விளையாடுவதையும் மாற்றி கொள்ளவே இல்லை.அதனால் அவன் உடல் கட்டுடலாக பார்பவரை கவர்ந்து இழுக்க கூடியதாக இருந்தது.
இத்தனை இருந்தும் நிரஞ்சன் சற்று வருத்தமாகவே இருந்தான் .ஏன் என்றால் அவன் குடியிருப்பில் அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்பது தான்.

1 comment:

naveed said...

make this story very inreresting