Sunday, December 21, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-14

வினோத் நிரஞ்சனை கைப்பிடித்து கூடிசென்று வீட்டின் விசாலமான வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.
சோபாவில் அமர்ந்தபடி அந்த வரவேற்பு அறையின் சுற்று சூழலை பார்க்க ஆரம்பித்தான் நிரஞ்சன்.அந்த வீட்டில் திருமணம் ஆகாத இரு ஆண்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு தூய்மையாகவும் ,அழகாகவும் அந்த வீடு பராமரிக்கப்பட்டு இருந்தது.வீட்டின் சுவர்களில் அழகான வாலிபர்களின் படங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த வாலிபர்கள் தங்கள் கட்டான தேகத்துடன் மேல் ஆடை இன்றி அங்கு இருந்த நிரஞ்சனின் உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு கொண்டு இருந்தனர்.
எங்கே உங்கள் அறை தோழர் மகேஷ் ? என்று அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக கேள்வி எழுப்பினான் நிரஞ்சன்.
அதை ஏன் கேட்கிறாய் ? நீ வருகிறாய் என்று நான் சொன்ன மறு வினாடி குளியல் அறைக்குள் சென்றவன் தான் இன்னும் தன்னை அழகு படுத்திகொண்டு இருக்கிறான் என்று நினைக்கிறேன். எப்போது வருவானோ தெரியாது என்று பதில் கூறி சிரித்தான் வினோத்.
நிரஞ்சனுக்கு வெகு நேரம் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.மகேஷ் வேறு இல்லை என்பதாலும்,தனிமையில் தன் உணர்வுகளை வினோத்துக்கு புரியவைத்து விட வேண்டும் என்ற ஆவலிலும்,வினோத் தோள்பட்டை மீது கைவைத்து உங்கள் உடம்பு அருமையாக உள்ளது ,தினமும் உடல் பயிற்சி செய்வீர்கள என்று கேட்டான் நிரஞ்சன்.
இல்லை நிரஞ்சன் என்று தன் மீது இருந்த நிரஞ்சனின் கை மீது தன் கையை வைத்தபடி சொன்ன வினோத்,என்ன நிரஞ்சன் உன் உடல் இவளவு சுடுகிறது ,உடம்பு எதுவும் சரி இல்லையா ?என்றபடி நிரஞ்சனின் கழுத்தில் கை வைத்து பார்த்தான் வினோத்.தன் உடல் வெப்பத்திற்கு காரணம் என்னவென்று சொல்வான் இந்த விடலை வாலிபன்.உன் மேல் கொண்ட காமத்தீ தான் என் உடல் வெப்பத்திற்கு காரணன் என்று உண்மையை சொல்ல முடியுமா இந்த வினோத்திடம்.தவித்தான் நிரஞ்சன் .ஒன்றும் இல்லை,சற்று நேரத்தில் சரியாகி போகும் என்றபடி இருந்த நிரஞ்சனின் தோள்பட்டையில் கை வைத்து அவனை கட்டி அணைத்த வினோத் சற்று நேரம் பொறு உன் உடல் சூட்டை தணிக்க குளிர்பானம் எடுத்து வருகிறேன் என்றபடி உள் இருந்த அறைக்கு சென்றான் வினோத்.

No comments: