வினோத்தின் அணைப்பில் தன்னை மறந்தபடி இருந்த நிரஞ்சன் லிப்ட் தாங்கள் இறங்க வேண்டிய தளத்திற்கு வந்து சேர்ந்ததும் தான் தன் சுயநினைவுக்கு வந்தான்.
வா நிரஞ்சன் ,இப்போதே உன் வீடிற்கு சென்று உன் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று விடலாம் என்று நிரஞ்சனை அழைத்தான் வினோத்.
சரி வாருங்கள் என்றபடி வீடு நோக்கி இருவரும் நடந்து கொண்டு இருந்தபோது நிரஞ்சனின் கை தொலைபேசி சிணுங்கியது.அதை எடுத்து பேச ஆரம்பித்தான் நிரஞ்சன்.அதில் பேசியது அவனுடைய பாதுகாவலர் தான்.
அவர் விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.அவசர பனி காரணமாக வெளியூர் செல்வதாகவும்,அவன் கல்லூரியில் இருந்ததால் வெகு நேரம் வரை அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவனிடம் நேரில் சொல்லிக்கொள்ள முடியாமல் தொலை பேசியில் தகவல் சொல்வதாகவும் ,அவர் ஒரு நாள் கழித்து தான் ஊருக்கு திரும்ப வரபோவதாகவும் அதுவரை கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.
நிரஞ்சனுக்கு ஒரே magilchi
No comments:
Post a Comment